ஷாருகானின் பதான் 8 நாட்களில் ரூ.650 கோடி வசூல் இந்தியாவில் ரூ.400 கோடி


ஷாருகானின் பதான் 8 நாட்களில் ரூ.650 கோடி வசூல் இந்தியாவில் ரூ.400 கோடி
x

8 வது நாளில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்த பதான் படம் கிட்டத்தட்டரூ.400 கோடி கிளப்பை நெருங்குகிறது.

மும்பை

ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் வெளியான 7 நாட்களிலேயே ஷாருக்கானின் 'பதான்' திரைப்படம் உலகளவில் 634 கோடி வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்து உள்ளது. இப்படம் ஜனவரி 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

'பதான்' படம் திரைக்கு வரும் முன்பே எதிர்ப்புகளை சந்தித்தது. பாடல் காட்சியொன்றில் தீபிகா படுகோனே காவி நிறத்தில் நீச்சல் உடை அணிந்து நடனம் ஆடியதை கண்டித்து வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்தன. தீபிகா படுகோனே கொடும்பாவியை எரித்தனர். பதான் படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக்கும் டிரெண்ட் ஆனது.

அதையும் மீறி படம் திரைக்கு வந்து வசூல் குவித்து உள்ளது.

இப்படம் ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் ரூ.634 கோடி வசூலித்துள்ளது. 'பதான்' ஏழாவது நாளில் 23 கோடிகளை இந்தியில் வசூலித்தது, இதில் இந்தியில் 22 கோடி மற்றும் அனைத்து டப்பிங் பதிப்புகளிலும் 1 கோடி.

இந்தியாவில் மொத்த வசூல் 330.25 கோடியாக உயர்ந்துள்ளது.இந்தியில் 318.50 கோடி ரூபாயும், டப்பிங் வெர்ஷனில் 11.75 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

இந்தியாவில் 8ம் நாளாக பதான் பாக்ஸ் ஆபிஸில் மொத்தம் 349.75 கோடிகளை இப்படம் வெற்றிகரமாக வசூலித்துள்ளது. பதான் ரூ.400 கோடியை நெருங்கி வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் பதான் 8 ஆம் நாளில் ரூ 19.50 கோடிகளை பதான் வசூலித்துள்ளது.

இரண்டாவது வார இறுதியிலும் பாக்ஸ் ஆபிஸில் பதான் வசூலை தொடருகிறது.

தங்கல்: ரூ.374.53 கோடி

டைகர் ஜிந்தா ஹை: ரூ 339 கோடி

பிகே: ரூ 337.72 கோடி

பஜ்ரங்கி பைஜான்: ரூ 315.49 கோடி

சுல்தான்: ரூ 300.67 கோடி


Next Story