சமந்தா பகிர்ந்த தத்துவம்


சமந்தா பகிர்ந்த தத்துவம்
x

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தாவுக்கு திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. கணவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் நடிக்க வந்த நிலையில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இதற்காக தொடர்ந்து சிகிச்சைகள் எடுத்தும் குணமாகவில்லை.

இதனால் சினிமாவை விட்டு ஒரு வருடம் விலகி இருந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்து இருப்பதாகவும், இதற்காக புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் சமந்தா தனது வலைத்தள பக்கத்தில் "மரணத்தில் இருந்து நம்மை எதுவும் காப்பாற்றாது. எனவே காதல் மூலமாவது வாழ்க்கையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்'' என்ற தத்துவ வார்த்தைகளை பகிர்ந்துள்ளார். இது சிலி நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளரின் வாசகம் என்பது குறிப்பிடத்தக்கது.

சமந்தா எதற்காக இதனை பகிர்ந்துள்ளார். அவருக்கு மீண்டும் காதல் வந்துள்ளதா? யாரை காதலிக்கிறார்? சமந்தா மனதை கவர்ந்த அந்த மனிதர் யார்? என்றெல்லாம் வலைத்தளத்தில் ரசிகர்கள் பதிவுகள் வெளியிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

1 More update

Next Story