'உலக நாடுகள் ஓடி வரட்டும், கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்' - நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு


உலக நாடுகள் ஓடி வரட்டும், கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம் - நிலநடுக்கம் குறித்து கவிஞர் வைரமுத்து பதிவு
x

துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரை சுமார் 6 ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.

இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், உயிர் தப்பியவர்கள் தங்கள் குடும்பத்தினரை தேடி அலையும் காட்சிகள் மனதை பதைபதைக்கச் செய்கின்றன. மீட்பு பணிகளில் துருக்கி அரசுக்கு உதவ இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்த நிலையில் துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-

"துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது

ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன

வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன

மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன

மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன்

உலக நாடுகள் ஓடி வரட்டும்

கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்"

இவ்வாறு கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




Next Story