காதல் வதந்திக்கு பிரபாஸ் விளக்கம்


காதல் வதந்திக்கு பிரபாஸ் விளக்கம்
x

காதல் வதந்திக்கு நடிகர் பிரபாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

'பாகுபலி' படத்தில் பிரபலமான பிரபாஸ் தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தற்போது ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ள 'ஆதிபுருஷ்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

ஏற்கனவே பிரபாசையும் நடிகை அனுஷ்காவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் காதலிக்கவில்லை என்று இருவருமே மறுத்தனர்.

இந்த நிலையில் ஆதிபுருஷ் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்துள்ள கீர்த்தி சனோனுடன் பிரபாசுக்கு காதல் மலர்ந்துள்ளதாக வலைத்தளத்தில் தகவல்கள் பரவி உள்ளன. இருவரும் காதலிப்பது உண்மையா என்று ரசிகர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு பிரபாஸ் பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, ''நானும், கீர்த்தி சனோனும் காதலிப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இதற்கு கீர்த்தி சனோன் ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளார். எங்களுக்குள் காதல் எதுவும் இல்லை'' என்றார்.


Next Story