பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் டுடே' படத்தின் டிரைலர் வெளியானது..!


பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள லவ் டுடே படத்தின் டிரைலர் வெளியானது..!
x

'கோமாளி' பட இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள 'லவ் டுடே' படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவியுடன் இணைந்து யோகிபாபு, காஜல் அகர்வால், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கும் அடுத்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. அவரே இயக்கி நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்திற்கு விஜய் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' படத்தின் டைட்டிலை வைத்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், 'லவ் டுடே' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலர் இணையத்தில் வைரலாகி வருகிறது. 'லவ் டுடே' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story