மனைவி சினேகாவை பாராட்டிய பிரசன்னா


மனைவி சினேகாவை பாராட்டிய பிரசன்னா
x

நடிகர் பிரசன்னாவும், நடிகை சினேகாவும் காதலித்து 2012-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் தங்களின் 11-வது திருமண நாளையொட்டி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரசன்னா வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான பதிவில், "ஏய் பொண்டாட்டி. இந்த சிறப்பான நாளில் நான் சொல்ல விரும்புவது. எனது வாழ்வில் நிறைய திருப்பங்கள். உன் கையை பிடித்து பயணித்து நிறைய கற்றுக்கொண்டேன். இந்த பயணத்துக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்.

கஷ்டங்கள் மற்றும் சவால்களை எதிர்கொண்டேன். அருகில் நீ இருந்ததால் அவற்றால் என்னை எதுவும் செய்ய முடியவில்லை. உனது அன்புதான் என்னை வழிநடத்தியது. எனது இருளை விரட்டும் ஒளி நீ. உன்னை மனைவியாக பெற்றதற்காக நன்றி. நமது குழந்தைகள் விலை மதிப்புமிக்க பரிசுகள். உனது அன்பு மற்றும் புன்னகையால் எனது உலகை அற்புதமாக வைத்து இருக்கிறாய்.

உன்னுடையை கையைப் பிடித்துக்கொண்டு தொலை தூர நாடுகளுக்கு செல்ல விருப்பம் உள்ளது. இனிய திருமண நாள் வாழ்த்துகள். எனது அன்பே கண்ணம்மா ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாக வாழ்வோம். உன்னை எப்போதும் காதலிக்கிறேன். நமது காதல் வலுவானது. நம்மை பற்றி மில்லியன் கணக்கில் வதந்திகள் வந்தாலும் அவை தவிடு பொடியாகட்டும். வாழ்க்கையை நாம் முழுமையாக வாழ்வோம்'' என்று கூறியுள்ளார்.

1 More update

Next Story