'நிறம் பெரிய விஷயம் இல்லை' - பாகுபாடு குறித்து பிரியாமணி வருத்தம்


நிறம் பெரிய விஷயம் இல்லை - பாகுபாடு குறித்து பிரியாமணி வருத்தம்
x
தினத்தந்தி 1 April 2024 1:10 AM GMT (Updated: 1 April 2024 1:13 AM GMT)

தென்னிந்திய, வட இந்திய நடிகைகள் என்ற பாகுபாடு இருப்பது வருத்தம் அளிப்பதாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியாமணி பேமிலிமேன் வெப் தொடரில் நடித்த பிறகு வட இந்தியாவிலும் பிரபலமாகி உள்ளார்.

சினிமாவில் தென்னிந்திய, வட இந்திய நடிகைகள் என்று பாகுபாடு பார்க்க வேண்டாம் என்று பிரியாமணி வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''தென்னிந்திய வட இந்திய நடிகைகள் என்ற பாகுபாடு இருப்பது வருத்தம் அளிக்கிறது.

தற்போது தென்னிந்திய நடிகைகள் எல்லா மொழிகளிலும் தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர். தென்னிந்தியாவுக்கு தொடர்பு உள்ள கதாபாத்திரம் என்பதால் உங்களை தேர்வு செய்துள்ளோம் என்று சில இந்தி இயக்குனர்கள் சொல்கிறார்கள்.

இந்த மனநிலையில் மாற்றம் வர வேண்டும். தென்னிந்திய நடிகைகளுக்கும் இந்தியை சரளமாக பேச முடியும். அதோடு அழகாகவும் இருக்கிறோம். ஆனால் எங்கள் நிறம் இந்தி நடிகைகள் அளவுக்கு இருக்காது அவ்வளவுதான். நிறம் பெரிய விஷயம் இல்லை.

தென்னிந்தியாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு அனைத்து மொழிகளிலும் நல்ல புரிதல் இருக்கும். வசனங்களை சொல்லும்போது தவறுகள் நேர்ந்தாலும் எமோஷனை நன்றாக வெளிப்படுத்துவோம். எனவே பாகுபாடு பார்க்க வேண்டாம். அனைவருமே இந்திய நடிகர் நடிகைகள்தான்.''என்றார்.


Next Story