ஹாலிவுட் போராட்டத்துக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு


ஹாலிவுட் போராட்டத்துக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு
x

ஊதிய உயர்வு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் திரைக்கதை எழுதுவதை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஹாலிவுட் சினிமா மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர்கள் (ரைட்டர்ஸ் கில்டு ஆப் அமெரிக்கா) வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போராட்டத்துக்கு ஹாலிவுட் நடிகர் கூட்டமைப்பும் ஆதரவு தெவித்துள்ளது. முன்னணி நடிகர்கள் மெரில் ஸ்ட்ரீப், ஜெனிபர் லாரன்ஸ், மெட் டேமன், புளோரன்ஸ் பக், ரம் மலெக் உள்ளிட்டோர் வெளிப்படையான ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் வேலைநிறுத்த போராட்டத்துக்கு நடிகை பிரியங்கா சோப்ராவும் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "ஹாலிவுட் எழுத்தாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவாக நான் இருக்கிறேன். நமது ஒற்றுமை, நமக்கான சிறந்த நாளை நிச்சயம் உருவாக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் நடிகர்-நடிகைகளும் இணைந்துள்ளதால் சினிமா, வெப் தொடர் போன்ற பணிகள் அனைத்துமே பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால் கடந்த 63 ஆண்டுகளில் முதன் முறையாக ஹாலிவுட் முடங்கியிருக்கிறது.


Next Story