கேமியோ ரோலில் பிரியங்கா மோகன் - 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு


Priyanka Mohan in cameo role - Golden Sparrow song release date announced
x

பிரியங்கா மோகன் நடனமாடியுள்ள 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ப.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்'. இந்த படத்தின் மூலம் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மாத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தின் முதல் பாடலுக்கான பைனல் மிக்சிங் முடிவடைந்திருக்கிறது.

சமீபத்தில், நடிகர் தனுஷ் முதல் சிங்கிளான 'கோல்டன் ஸ்பாரோ' விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருந்தார். இந்த பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இந்நிலையில், இப்பாடல் வெளியாகும் தேதியை புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, 'கோல்டன் ஸ்பாரோ' பாடல் வரும் 30-ம் தேதி வெளியாக உள்ளது.


Next Story