'புஷ்பா 2' படத்தில் இணைந்த ஆஸ்கார் நாயகன்


புஷ்பா 2 படத்தில் இணைந்த ஆஸ்கார் நாயகன்
x

'புஷ்பா 2' படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 இல் வெளியான படம் புஷ்பா தி ரூல். இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, சுனில், பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட 400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றது.

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடிப்பில், சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகி இருக்கும் 'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பான தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளை அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு 'புஷ்பா 2' படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை வெளியாகவுள்ள ட்ரெய்லரில் அவரது சவுண்ட் மிக்சிங் மாயாஜாலம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அடுத்து இந்த படத்தின் டீசருக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story