ராதாரவியின் புதிய தோற்றம்


ராதாரவியின் புதிய தோற்றம்
x

ராதாரவி தற்போது புதிய வித்தியாசமான தோற்றத்தில் தன்னை புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.

நடிகர் ராதாராவி ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து பின்னர் கமல்ஹாசனின் 'மன்மத லீலை' படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். டி.ராஜேந்தரின் உயிருள்ளவரை உஷா படத்தில் முதல் முறையாக வில்லன் வேடம் ஏற்றார்.

சில படங்களில் கதாநாயகனாகவும் வந்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 500 படங்களுக்கு மேல் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார்.

இப்போதைய இளம் கதாநாயகர்களுடன் இணைந்தும் பிஸியாக நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கிறார்.

இந்த நிலையில் ராதாரவி தற்போது புதிய வித்தியாசமான தோற்றத்தில் தன்னை புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ராதாரவி ஹாலிவுட் நடிகர் போல் உருமாறி இருப்பதாக பாராட்டி வருகிறார்கள்.

1 More update

Next Story