'காந்தாரா' 2-ம் பாகத்தில் ரஜினி?


காந்தாரா 2-ம் பாகத்தில் ரஜினி?
x

‘காந்தாரா’ 2-ம் பாகத்தில் ரஜினிகாந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கன்னட இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.

கன்னடத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தி இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்த படம் 'காந்தாரா'. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர்.

இதில் ரிஷப் ஷெட்டி கதாநாயகனாக நடித்து இயக்கி இருந்தார். 'காந்தாரா' படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று ரிஷப் ஷெட்டி அறிவித்து உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் 'காந்தாரா' 2-ம் பாகத்தில் ரஜினிகாந்தை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக கன்னட இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.

இந்த தகவலை ரசிகர்களும் "ஹிட் படத்தில் சூப்பர் ஸ்டார்'' என்ற தலைப்பில் வைரலாக்கி வருகிறார்கள். ஏற்கனவே 'காந்தாரா' படத்தை ரஜினிகாந்த் பார்த்து ரிஷப் ஷெட்டியை சென்னையில் உள்ள தனது வீட்டுக்கு நேரில் அழைத்து பாராட்டினார்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரிஷப் ஷெட்டியிடம் 'காந்தாரா 2' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரிஷப் ஷெட்டி சிரித்துவிட்டு பதில் எதுவும் செல்லாமல் சென்றுவிட்டார். 'காந்தாரா 2' படப்பிடிப்பை ஜூன் மாதம் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.


Next Story