மீண்டும் கதாநாயகனாக ராமராஜன்


மீண்டும் கதாநாயகனாக ராமராஜன்
x

ராகேஷ் இயக்கும் ‘சாமானியன்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை ராமராஜன் தொடங்குகிறார்.

தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படம் என்றாலே ரசிகர்களின் நினைவுக்கு வருபவர் ராமராஜன்தான். அந்த அளவு அவர் நடித்த படங்கள் வெற்றி பெற்றுள்ளன. 'எங்க ஊரு பாட்டுக்காரன்', 'எங்க ஊரு காவல்காரன்', 'என்ன பெத்த ராசா', 'கரகாட்டக்காரன்', 'பாட்டுக்கு நான் அடிமை' போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டு வருகின்றன.

ராமராஜன் கடைசியாக 2012-ம் ஆண்டு 'மேதை' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆனாலும் அவ்வப்போது ராமராஜன் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன.

அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கிறார். ராகேஷ் இயக்கும் 'சாமானியன்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை ராமராஜன் தொடங்குகிறார். இது ராமராஜனுக்கு 45-வது படமாகும். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.


Next Story