5 மொழிகளில் வரும் ராமாயண படம்


5 மொழிகளில் வரும் ராமாயண படம்
x

ராமாயண கதையை மையமாக வைத்து `ஆதிபுருஷ்' என்ற படம் தயாராகி உள்ளது. இதில் ராமர் வேடத்தில் பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன், ராவணனாக சயீப் அலிகான் நடித்துள்ளனர். சன்னிசிங், தேவதத்தா நாகே ஆகியோரும் உள்ளனர். ஓம் ராவத் டைரக்டு செய்துள்ளார்.

படத்தில் இடம்பெறும் நடிகர்களின் தோற்றங்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் 'ஆதிபுருஷ்' படம் தயாராகி உள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள ஜெய் ஶ்ரீராம் பாடலை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

இந்தப் பாடல் ஶ்ரீராமரின் வலிமை மற்றும் சக்தியை குறிக்கும் வகையில் அஜய், அதுல் ஆகிய இரட்டை இசையமைப்பாளர்கள் இசையில் உருவாகி உள்ளது. 30-க்கும் மேற்பட்ட பாடகர்கள் இந்தப் பாடலை பாடி உள்ளனர். நாசிக் மேளமும் ஜெய் ஶ்ரீராம் கோஷமும் இணைந்து பாடல் உருவாகி இருக்கிறது. மாயாஜால காட்சிகளோடு இந்த பாடல் படமாக்கப்பட்டு உள்ளது.

ஜெய்ராம் பாடல் தெய்வீக உணர்வை ஊட்டக்கூடியது என்று படக்குழுவினர் தெரிவித்தனர். இந்தப் படம் அடுத்த மாதம் அனைத்து மொழிகளிலும் திரைக்கு வருகிறது.


Next Story