கவர்ச்சியாக நடிக்க விரும்பும் ராஷிகன்னா


கவர்ச்சியாக நடிக்க விரும்பும் ராஷிகன்னா
x

குடும்ப பாங்காக வந்த கதாநாயகிகள் பலர் கவர்ச்சிக்கு மாறி வரும் நிலையில் ராஷிகன்னாவும் கவர்ச்சியாக நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ள ராஷிகன்னா, தற்போது தனுஷ் ஜோடியாக திருச்சிற்றம்பலம், கார்த்தியுடன் சர்தார் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

தெலுங்கிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். குடும்ப பாங்காக வந்த கதாநாயகிகள் பலர் கவர்ச்சிக்கு மாறி வரும் நிலையில் ராஷிகன்னாவும் கவர்ச்சியாக நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து ராஷிகன்னா அளித்துள்ள பேட்டியில், ''எனக்கு கவர்ச்சியாக நடிக்க பிடிக்கும். ரசிகர்களும் என்னை கவர்ச்சியாக பார்க்கத்தான் விரும்புகிறார்கள். நகைச்சுவை காட்சிகளில் நடிப்பது கஷ்டம். ஆனால் காதல் காட்சிகளிலும் கவர்ச்சியாகவும் நடிப்பது எளிதானது. இதுவரை காதல் காட்சிகளில் நிறைய நடித்து விட்டேன். தற்போது முதல் தடவையாக புதிய படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறேன்" என்றார்.

1 More update

Next Story