'இப்போது நான் நடிப்பது ஸ்ரீவள்ளி 2.0' - ராஷ்மிகா மந்தனா
தற்போது ராஷ்மிகா மந்தனா புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
இந்திய அளவில் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்ற பட்டியலில் முதல் இடம் பிடித்து இருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் நடித்த புஷ்பா திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தமிழில் கார்த்தியின் சுல்தான், விஜய் ஜோடியாக வாரிசு படங்களில் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா.
இவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெருகின்றன. சமீபத்தில் இவர் நடித்த சீதா ராமம், அனிமல் போன்ற படங்கள் ரசிகர்களை கவர்ந்தன. தற்போது இவர் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் ராஷ்மிகா மந்தனா, புஷ்பா படம் குறித்து அளித்துள்ள பேட்டியில்,
நான் புஷ்பா படத்தில் நடித்தபோது ஸ்ரீவள்ளி பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால், படத்தின் கதை பற்றியும் கதாபாத்திரம் பற்றியும் அதில் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பது பற்றியும் எதுவுமே அப்போது எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு விளையாட்டு மைதானத்திற்கு செல்வதுபோல் சென்றேன்.
ஆனால், இப்போது எனது கதாபாத்திரம் பற்றியும் எவ்வாறு நடிக்க வேண்டும் என்பது பற்றியும் நன்கு தெரியும். இப்போது நான் நடிப்பது ஸ்ரீவள்ளி 2.0 . தன்னால் படம் குறித்து அதிகமாக தெரிவிக்கமுடியாது. இவ்வாறு கூறினார்.