"லேடி சூப்பர் ஸ்டார்" நயன்தாராவை மிகவும் நான் மதிக்கிறேன் - நடிகை மாளவிகா மோகனன் விளக்கம்


லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை மிகவும் நான் மதிக்கிறேன் - நடிகை மாளவிகா மோகனன் விளக்கம்
x

விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாளவிகா மோகனன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை

நடிகை மாளவிகா மோகனன் ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது பிடிக்காது என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.மாளவிகா மோகனனின் பேச்சுக்கு நயன்தாரா ரசிகர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மலையாள நடிகை மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர் நடிப்பில் மலையாளத்தில் கிறிஸ்டி என்ற படம் தயாராகி வருகிறது. படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதன் புரோமோஷன் வேலைகளில் மும்முரமாக இருக்கும் மாளவிகா பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார். மலையாள ஊடகம் ஒன்றுக்கு மாளவிகா அளித்த பேட்டி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அந்த பேட்டியில் மாளவிகா லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்து பற்றி பேசினார். ஹீரோயின்களை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று கூறினார். ஹீரோக்களை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பது போல் ஹீரோயின்களையும் சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டும் என்று மாளவிகா கூறினார். கத்ரீனா கைப், ஆலியா பட், தீபிகா படுகோனே ஆகியோர் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவதில்லை. அவர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் என்று மாளவிகா கூறினார்.

இதை பார்த்த ரசிகர்கள் நயன்தாரா மீது பொறாமை கொண்டதால் மாளவிகா மோகனன் இப்படி பேசுகிறார் என்று விமர்சித்து வருகின்றனர். நயன்தாராவும், மஞ்சு வாரியரும் மட்டுமே சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார்கள். நயன்தாராவை பார்த்து நயன்தாரா ரசிகர்கள் பொறாமையா என்று கேட்கிறார்கள்.

இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாளவிகா மோகனன் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்தப் பதிவில், "எந்த ஒரு நடிகையை குறிப்பிட்டு கருத்து கூறவில்லை. பெண் நடிகைகளைப் பற்றி என்னுடைய கருத்தை நான் தெரிவித்தேன். நயன்தாராவை மிகவும் நான் மதிக்கிறேன். மேலும் ஒரு மூத்த நடிகையாக அவரது நம்பிக்கையூட்டும் திரையுலக பயணத்தை நான் வியந்து பார்க்கிறேன். தயவு செய்து மக்கள் அமைதியாக இருங்கள்." எனத் தெரிவித்துள்ளார்.
Next Story