ஆர்.ஜே.பாலாஜி-யின் 'வீட்ல விசேஷம்' படத்தின் டிரைலர் வெளியானது..!


ஆர்.ஜே.பாலாஜி-யின் வீட்ல விசேஷம் படத்தின் டிரைலர் வெளியானது..!
x

ஆர்.ஜே.பாலாஜி-யின் 'வீட்ல விசேஷம்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. இந்த திரைப்படம் தமிழில் 'வீட்ல விசேஷம்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. தமிழ் ரீமேக்கை என்.ஜே.சரவணனுடன் இணைந்து நடிகர், இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முக திறமை கொண்ட ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார்.

சத்யராஜ், அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிரிஷ் கோபாலாகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். செல்வா படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற ஜூன் 17-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், 'வீட்ல விசேஷம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று நடைபெற்ற லக்னோ - பெங்களூரு அணிகளுக்கு இடையேயான பிளே ஆப் போட்டியின் வெளியானது. இதற்கு முன் அவர் நடித்து வெற்றி பெற்று இருந்த எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற படங்களின் டிரைலரும் அவ்வாறே வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. வீட்ல விசேஷம் திரைப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




Next Story