ஜப்பானில் வெளியாகும் 'ஆர்ஆர்ஆர்' - ஒரே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்


ஜப்பானில் வெளியாகும் ஆர்ஆர்ஆர் - ஒரே நிமிடத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்
x

ஜப்பானில் ‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 13-ம் தேதி தொடங்கியது.

டோக்கியோ,

ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 'ஆர்ஆர்ஆர்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த வருடம் மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது. இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்றது.

இந்நிலையில், ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகிறது. இதற்கான முன்பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.

ராஜமவுலி இயக்கிய 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் சிறப்புக் காட்சி வரும் 18-ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. இந்த நிகழ்வில் இயக்குநர் ராஜமவுலி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பார்வையாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.

இந்த சிறப்பு திரையிடலுக்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 13-ம் தேதி தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்துக்குள்ளாகவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளன.


Next Story