அஜித் பாணியில் பைக்கில் அமர்ந்து போஸ் கொடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர்
இமயமலை பகுதியில் பைக்கில் ஸ்டைலாக அமர்ந்தபடி எடுத்த புகைப்படம் ஒன்றை எஸ்.ஏ.சந்திரசேகர் பகிர்ந்துள்ளார்.
ஸ்ரீநகர்,
திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், இமயமலைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே நடிகர் அஜித், பல இடங்களுக்கு பைக்கில் பயணம் செய்த புகைப்படங்கள், ரசிகர்களால் வெளியிடப்பட்டு வைரலாகி வரும் நிலையில், தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் அதே போன்ற ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
பைக்கில் அமர்ந்தபடி ஸ்டைலாக, இமயமலை பகுதியில் எடுத்த புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். இதனால் அஜித்தை பின்பற்றி நடிகர் விஜய்யின் தந்தை பைக்கில் சுற்றுப்பயணம் செய்வதாக ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Related Tags :
Next Story