கொலை மிரட்டல் எதிரொலி : ஆயுத உரிமம் கோரி நடிகர் சல்மான் கான் விண்ணப்பம்


கொலை மிரட்டல் எதிரொலி : ஆயுத உரிமம் கோரி நடிகர் சல்மான் கான் விண்ணப்பம்
x

Image Courtesy : PTI 

கடந்த மாதம் சல்மான் கானிற்கு கடிதம் வாயிலாக மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து இருந்தார்.

மும்பை,

பிரபல இந்திப்பட நடிகர் சல்மான்கான். இவர் தனது குடும்பத்துடன் மும்பை பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த மாதம் சல்மான் கானிற்கு கடிதம் வாயிலாக மர்ம நபர் கொலை மிரட்டல் விடுத்து இருந்தார்.

இதையடுத்து சல்மான் கான் பாந்திரா போலீஸ் நிலையம் சென்று கொலை மிரட்டல் விடுத்த கடிதத்தை போலீசாரிடம் கொடுத்து புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சல்மான் கான் தனக்கும் அவரது தந்தைக்கும் அனுப்பப்பட்ட மிரட்டல் கடிதம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கரை இன்று சந்தித்து உள்ளார் . அப்போது அவர் தனது பாதுகாப்பிற்காக ஆயுத உரிமம் கோரி மும்பை காவல்துறைக்கு எழுத்துப்பூர்வ விண்ணப்பம் அளித்துள்ளார்.

1 More update

Next Story