'சமுத்திரகுமாரி பூங்குழலி' - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ


சமுத்திரகுமாரி பூங்குழலி - பொன்னியின் செல்வன் படக்குழு வெளியிட்ட புதிய வீடியோ
x

நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள பூங்குழலி கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

கல்கியின் புகழ் பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்-1'. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார்.

ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஐஸ்வர்ய லட்சுமி என முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 6-ம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.

தொடர்ந்து பல அப்டேட்டுகளை 'பொன்னியின் செல்வன்' படக்குழு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை ஐஸ்வர்ய லட்சுமி நடித்துள்ள பூங்குழலி கதாபாத்திரத்தின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. சிறிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள படக்குழு அந்த பதிவில், "காற்றைப் போல் மென்மையும், சமுத்திரத்தைப் போல வலிமையும் நிறைந்த சமுத்திரகுமாரி பூங்குழலியாக நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமியை சந்திக்கவும்!" என்று பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story