கிராமத்து கதையில் சசிகுமார்


கிராமத்து கதையில் சசிகுமார்
x

சசிகுமார் நடித்துள்ள `அயோத்தி' படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து `நந்தா' என்ற பெயரில் தயாராகும் படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக சுருதி பெரியசாமி நடித்துள்ளார். பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி, ஸ்டாலின் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை இரா. சரவணன் டைரக்டு செய்துள்ளார். இவர் ஏற்கனவே `கத்துக்குட்டி', `உடன்பிறப்பே' ஆகிய படங்களை இயக்கி உள்ளார். `நந்தா' படம் பற்றி அவர் கூறும்போது, ``முழுமையான கிராமத்து கதை. பஞ்சாயத்து தலைவரின் வேலைக்காரராக சசிகுமார் நடிக் கிறார். வெற்றிலை கரை படிந்த பல்லோடு அவரது கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும்.

2 மாதம் தொடர்ந்து வெற்றிலை போட்டு பல்லை கரையாக்கி இருந்தார். ஒரு காட்சியில் சசிகுமாரை நாயகி சுருதி பெரியசாமி சவால்விட்டு கையில் தூக்கும்போது இருவரும் கீழே விழுந்தனர். இதில் சுருதிக்கு பலத்த அடிபட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். சசிகுமாருக்கு சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன'' என்றார். படப்பிடிப்பு புதுக்கோட்டை, தஞ்சை பகுதிகளில் நடந்துள்ளது. ஒளிப்பதிவு: சரண்.


Next Story