சசிகுமார் நடிக்கும் 'நான் மிருகமாய் மாற' படத்தின் டிரைலர் வெளியானது..!


சசிகுமார் நடிக்கும் நான் மிருகமாய் மாற படத்தின் டிரைலர் வெளியானது..!
x

நடிகர் சசிகுமார் நடித்துள்ள 'நான் மிருகமாய் மாற' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

சென்னை,

இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் 'நான் மிருகமாய் மாற'. இந்த படத்திற்கு ராஜா பட்டாசார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். என்பி ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் நடிகை ஹரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் விக்ராந்த் வில்லனாக நடித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிப்ரான் பின்னணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை. நவம்பர் முதல் வாரத்தில் 'நான் மிருகமாய் மாற' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில், இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை நடிகர் ஆர்யா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார். இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story