மகிழ்ச்சியாக வாழ வழிசொல்லும் சதா


மகிழ்ச்சியாக வாழ வழிசொல்லும் சதா
x

மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்ஸ்டாகிராமில் நடிகை சதா பதிவிட்டுள்ளார்.

தமிழில் ஜெயம், எதிரி, வர்ண ஜாலம், அந்நியன். பிரியசகி, திருப்பதி, உன்னாலே உன்னாலே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள சதா தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி என்று இன்ஸ்டாகிராமில் சதா வெளியிட்டுள்ள பதிவில், ''வாழ்க்கையில் அனைவருக்கும் இருக்க வேண்டிய ஒரே லட்சியம் எப்போதும் சந்தோஷமாக இருப்பது மட்டும்தான். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சந்தோஷமாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். நமது மகிழ்ச்சியை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். மகிழ்ச்சியை கொடுக்கும் விஷயங்களையும் மனிதர்களையும் கண்டுபிடியுங்கள். ஆனந்தமாக இருப்பது என்பது நமக்குள்தான் இருக்கிறது. அதற்காக எங்கெங்கோ சென்று தேடவேண்டாம். நம்மை அதிருப்திக்கு ஆளாக்கும் மனிதர்கள் அடிக்கு ஒருவர் இருப்பார்கள். வாழ்க்கை மீது வெறுப்பை ஏற்படுத்தும் நிலைமைகள் கூட எதிர்படலாம். ஆனால் அதைப்பற்றியே யோசித்துக் கொண்டு இருக்காமல் நமக்கு ஆனந்தத்தை கொடுக்கும் இதர விஷயங்கள் மீது கருத்தை செலுத்த வேண்டும். நம்மை நாம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வது என்பது சுயநலம் அல்ல. மனஅமைதி இருக்க வேண்டும் என்றால் உங்களை சுற்றி இருக்கும் சுயநலக்காரர்களை விட்டு தூரமாக விலகி இருங்கள்'' என்று கூறியுள்ளார்.


Next Story