'அட்லியின் குழந்தையை பார்த்தேன்' - ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதில்


அட்லியின் குழந்தையை பார்த்தேன் - ரசிகரின் கேள்விக்கு ஷாருக்கான் பதில்
x

அட்லியின் குழந்தையை பார்த்ததாகவும், இறைவனின் அருளால் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஷாருக்கான் தெரிவித்தார்.

மும்பை,

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அண்மையில் வெளியான 'பதான்' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு வசூல் சாதனைகளையும் படைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து ஷாருக்கான் அடுத்ததாக கோலிவுட் இயக்குனர் அட்லி இயக்கும் 'ஜவான்' திரைப்படத்தில் நடிக்கிறார்.

ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இதில் நடிகை நயன்தாரா, நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் ஜூன் 2-ந்தேதி இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.

இதனிடையே இயக்குனர் அட்லி-பிரியா தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது. இதை கடந்த ஜனவரி 31-ந்தேதி அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இதையடுத்து அட்லி-பிரியா தம்பதிக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடிய போது அவரிடம், 'அட்லியின் குழந்தையை பார்த்தீர்களா?' என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், தான் அட்லியின் குழந்தையை பார்த்ததாகவும், இறைவனின் அருளால் குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.


Next Story