வரலாற்று படத்தில் ஷங்கர் - சூர்யா கூட்டணி


வரலாற்று படத்தில் ஷங்கர் - சூர்யா கூட்டணி
x

கடந்த சில நாட்களாகவே ‘வேள்பாரி’ நாவல் திரைப்படமாக உருவாக இருக்கிறது என்றும், ஷங்கர் டைரக்டு செய்யும் இந்த படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

'விருமன்' இசை வெளியீட்டு விழாவில் கூட, 'வேள்பாரி' நாவல் குறித்து சூர்யா சில கருத்துகளை பேசியிருந்தார். பின்னர் அவர், இதுகுறித்து வேறொரு மேடையில் பேசுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையில் ஷங்கர் இயக்கத்தில் 'வேள்பாரி' வரலாற்று நாவல் பிரமாண்ட படமாக உருவாக இருப்பதாகவும், இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் '2டி' நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், முதன்மை கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

'பான் இந்தியா' படமாக உருவாகும் இந்த படத்துக்காக மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழி சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பேசப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை பொங்கல் பண்டிகையின்போது வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

'பொன்னியின் செல்வன்' படத்தை தொடர்ந்து 'வேள்பாரி' மிகப்பெரிய பிரமாண்ட வரலாற்று படமாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். 'வேள்பாரி' நிஜமாகுமா?


Next Story