மலை கிராமத்து பெண்ணாக ஷீலா


மலை கிராமத்து பெண்ணாக ஷீலா
x

தமிழ் தயாளன் இயக்கி உள்ள ‘கெவி’ என்ற படத்தில் மலை கிராமத்து பெண்ணாக ஷீலா நடிக்கிறார்.

தமிழ் தயாளன் இயக்கி உள்ள படம் 'கெவி.' இதில் கதையின் நாயகனாக ஆதவன் அறிமுகமாகிறார். நாயகிகளாக ஷீலா ராஜ்குமார், ஜாக்குலின் ஆகியோர் நடிக்கின்றனர். 'மெட்ராஸ்' படத்தில் வில்லனாக வந்த சார்லஸ் வினோத், திருநங்கை ஜீவா, உமர் பரூக், விவேக் மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கவுதம் சொக்கலிங்கம் தயாரிக்கிறார். இசை: பாலசுப்பிரமணியன், ஒளிப்பதிவு: ஜெயசூர்யா.

படம் பற்றி இயக்குனர் தமிழ் தயாளன் கூறும்போது, "கெவி என்பதற்கு அடிவாரம் அல்லது பள்ளம் என்று பொருள். தமிழக வரலாற்றில் எத்தனையோ ஆட்சிகள் மாறி இருக்கின்றன. ஆனால் மலைப்பகுதியில் இன்னும் மாறாத விஷயங்கள் இப்போதும் தொடர்ந்து வருகின்றன. இந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி ஒரு முக்கிய சமூக பிரச்சினையை படம் பேசுகிறது. மலை கிராமத்து பெண்ணாக ஷீலா ராஜ்குமாரும், முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்குலினும் நடித்துள்ளனர். இந்த இருவரும் பிரச்சினைகளை எதிர்கொண்டு ஒரு இக்கட்டான சூழலை எப்படி சமாளிக்கின்றனர் என்பதை விறுவிறுப்பு கலந்து கூறியுள்ளோம்'' என்றார்.


Next Story