மகளுடன் உடற்பயிற்சி செய்த ஷில்பா ஷெட்டி - வைரலான வீடியோ

image courtecy:instagram@theshilpashetty
நடிகை ஷில்பா ஷெட்டி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
சென்னை,
உலக சுகாதார தினம் 1948 ல் உலக சுகாதார நிறுவனம் நிறுவப்பட்ட ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று கொண்டாடப்படுகிறது. நேற்று இந்த தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், உலகில் பொது சுகாதார அக்கறையின் முன்னுரிமைப் பகுதியை முன்னிலைப்படுத்த ஒரு கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. உலக சுகாதார தினத்தின் இந்தாண்டு கருப்பொருள், 'எனது ஆரோக்கியம், எனது உரிமை' என்பதாகும். உலகம் முழுவதும் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை இந்த நாள் ஏற்படுத்துகிறது.
இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி உலக சுகாதார தின வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி. 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தி சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். பாஜிகர் திரைப்படத்தில் அறிமுகமானதிலிருந்து பாலிவுட், தமிழ், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 1994 ல் வெளிவந்த ஆக் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ஷில்பா ஷெட்டி, மகள் சமிசாவுடன் உடற்பயிற்சி செய்கிறார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வைரலாகி உள்ளது.