குழந்தைகள் படத்தில் சிவகார்த்திகேயன்


குழந்தைகள் படத்தில் சிவகார்த்திகேயன்
x

’அயலான்’ குழந்தைகளுக்கான படம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் `அயலான்' படத்தில் நடித்துள்ளார். இதில் ரகுல்பிரீத் சிங் நாயகியாக வருகிறார். ரவிக்குமார் இயக்கி உள்ளார். வேற்றுக் கிரகவாசியை மையமாக வைத்து படம் தயாராகி உள்ளது.

படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறும்போது, ``அயலான் குழந்தைகளுக்கான படம். குழந்தை மனம் படைத்தவர்களுக்கான படம். இயக்குனர் படத்தை 95 நாட்களில் எடுத்து முடித்து விட்டார். இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவரும் கதைக் கேட்டு உடனே சம்மதம் சொன்னார். இந்தியாவில் லார்ஜ் பார்மேட் கேமராவில் எடுத்த முதல் படம் `அயலான்'தான்.

இதேபோன்று ஏலியன், ஸ்பேஸ் ஷிப் வைத்து இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். ஒரு படம் முயற்சி செய்தார். அதற்கு பிறகு நீங்கள்தான் என சொன்னார்கள். படத்தில் 4, 6 வி.எப்.எக்ஸ் ஷாட்ஸ் உள்ளது. இந்தப் படத்தின் மொத்த டெக்னீஷியன்களும் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள். இதற்கு வெளிநாடு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு கட்டத்தில் படத்திற்கு நிதி தேவை என்ற நிலை வந்தபோது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன். `அயலான்' படத்தைக் குடும்பத்தோடு திரையரங்குகளில் பொங்கலுக்கு போய் பார்க்கலாம்'' என்றார்.


Next Story