நடிகை பூஜா ஹெக்டேவிடம் தகாத முறையில் நடந்து கொண்ட விமான ஊழியர்
விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே கூறி உள்ளார்.
சென்னை
பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும், அதன் நாயகி பூஜா ஹெக்டேவுக்கு பெரிய அளவில் புகழ் தந்துள்ளது. தென்னிந்தியாவில் அதிக ஊதியம் வாங்கும் அளவிற்கு அவரை உயர்த்தியுள்ளது.
இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் தனது டுவிட்டர் பக்கத்தில் பூஜா ஹெக்டே ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தான் மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்தாகவும், அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பூஜா, தான் வழக்கமாக இது போன்ற பதிவுகளை வெளியிடுவதில்லை என்றும், ஆனால், அந்த ஊழியர் தன்னிடம் வெளிப்படுத்திய விதம் பயங்கரமாக இருந்ததாகவும், அதனால் அதை தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் இந்த பதிவை வெளியிடுவதாக இண்டிகோ விமானத்தை டாக் செய்து பூஜா ஹெக்டே பதிவிட்டுள்ளார்.
பிரபல விமான நிலைய ஊழியர் மீது பிரபல நடிகை நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
staff member, by the name of Vipul Nakashe behaved with us today on our flight out from Mumbai