தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திர தம்பதிகள்


தலை தீபாவளி கொண்டாடும் நட்சத்திர தம்பதிகள்
x

இவ்வருடம் திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள் இந்த தீபாவளி பண்டிகையை தலை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி கொண்டாட உள்ள தலை தீபாவளி குறித்து ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். நயன்தாரா-விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9-ந்தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த நிலையில் சமீபத்தில் இவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலையை கிளப்பினர். பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே இந்த ஜோடி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

ரவீந்தர் சந்திரசேகர் - மகாலட்சுமி

அடுத்தபடியாக தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், தொலைக்காட்சி வர்ணனையாளர் மகாலட்சுமி ஜோடி குறித்து எதிர்பார்ப்பு நிலவுகிறது. இருவருக்குமே இது 2-வது திருமணம் என்றாலும் முக்கியமான நட்சத்திர ஜோடியாகவே பார்க்கப்படுகிறது. சமூக வலைத்தளங்களிலும் இவர்களது பேட்டி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பிரபலமான இவர்கள் தேனிலவு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் குறித்து ஒரு பட்டிமன்றமே நடத்தப்பட்டது. தலை தீபாவளியன்று என்ன கொண்டாட்டம் காத்திருக்கிறது? என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

ரன்பீர் கபூர்-ஆலியா பட்

பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட் - ரன்பீர் கபூர் தம்பதி, இந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர் களுக்கு நவம்பரில் குழந்தை பிறக்க உள்ள நிலையில், இந்த புது தம்பதி இந்த வருடம் தலை தீபாவளியை கொண்டாட உள்ளனர். கணவன்-மனைவி இருவரும் புதிய படங்களில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

ஆதி- நிக்கி கல்ராணி

நடிகர் ஆதியும், நடிகை நிக்கி கல்ராணியும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்னர் பாரிஸ் நாட்டுக்கு தேனிலவு சென்று வந்தனர். இந்த புதிய ஜோடி தற்போது தலை தீபாவளி கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகை என்பது புதிதாக திருமணம் செய்திருக்கும் தம்பதியர் களுக்கு கொஞ்சம் ஸ்பெஷல்தான். அந்தவகையில் இவ்வருடம் திருமணம் செய்துகொண்ட சினிமா பிரபலங்கள் இந்த தீபாவளி பண்டிகையை தலை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்.

சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான புகழ்-பென்சி, சித்து-ஸ்ரேயா, மதன்-ரேஷ்மா, ஆர்யன்-ஷபானா ஆகியோரும் தங்களது தலை தீபாவளியை கொண்டாட தயாராகி வருகிறார்கள். இவர்களது தலை தீபாவளி கொண்டாட்டத்தை காண ரசிகர்களும் ஆவலுடன் இருக்கிறார்கள்.


Next Story