படமாகும் சூர்யாவின் 'ரோலக்ஸ்' கதாபாத்திரம்


படமாகும் சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம்
x

விக்ரம் படத்தின் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரம் தனி படமாக தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளதாக லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படம் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. நல்ல வசூலும் பார்த்தது.

இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இருந்தார். இன்னொரு சிறப்பு அம்சமாக படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிறிது நேரம் வந்த சூர்யாவின் ரோலக்ஸ் வில்லன் கதாபாத்திரம் மிரட்டலாக அமைந்தது. படத்துக்கு அந்த கதாபாத்திரம் பலமாகவும் இருந்தது.

இதையடுத்து விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்திலேயே அதிக நேரம் முக்கிய வில்லனாக நடிப்பார் என்று பேசப்பட்டது.

இந்த நிலையில் ரோலக்ஸ் கதாபாத்திரம் தனி படமாக தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து லோகேஷ் கனகராஜ் அளித்துள்ள பேட்டியில், ''ரோலக்ஸ் கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து தனிப்படம் இயக்க முடிவு செய்துள்ளேன்" என்று கூறியுள்ளார். இது சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய்யின் 67-வது படத்தை இயக்கி வருகிறார். கைதி 2 படம் எடுக்கும் திட்டமும் உள்ளது.

1 More update

Next Story