'விக்ரம்' 3-ம் பாகத்தில் வில்லனாக சூர்யா


விக்ரம் 3-ம் பாகத்தில் வில்லனாக சூர்யா
x

விக்ரம் 3-ம் பாகத்தில் முழு படத்திலும் சூர்யா வில்லனாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கதாநாயகர்கள் சமீப காலமாக வில்லன்களாக நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். விஜய்சேதுபதி பல படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார். தற்போது திரைக்கு வந்துள்ள கமல்ஹாசனின் விக்ரம் படத்திலும் வில்லன் வேடம் ஏற்றுள்ளார்.

கமல் ஏற்கனவே 1986-ல் வெளியான விக்ரம் படத்தில் நடித்துள்ளதால் அதன் இரண்டாம் பாகமாக தற்போது வந்துள்ள விக்ரம் படம் பார்க்கப்படுகிறது. அடுத்து விக்ரம் 3-ம் பாகமும் தயாராக உள்ளது. விக்ரம் 2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யா வில்லனாக வந்து செல்கிறார்.

விக்ரம் 3-ம் பாகத்தில் முழு படத்திலும் சூர்யா வில்லனாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமல்ஹாசன் ஏற்கனவே அளித்த பேட்டியில் விக்ரம் 3-ம் பாகம் உருவானால் அதையும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார். சூர்யா நடித்துள்ள காட்சி படத்தின் 3-ம் பாகத்துக்கான ஆரம்பமாக இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

மேலும் கமல்ஹாசன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், "கடைசி மூன்று நிமிடமே வந்து திரையரங்குகளை அதிரவைத்த எனது அருமை தம்பி சூர்யா அன்பிற்காக மட்டுமே அதை செய்தார். அவருக்கு நன்றி சொல்லும் படலத்தை அடுத்து நாங்கள் இணைய உள்ள படத்தில் முழுவதுமாக காட்டிவிடலாம் என்று இருக்கிறேன்'' என்று கூறியுள்ளார். இதன் மூலம் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் 3-ம் பாகத்தில் சூர்யா வில்லனாக நடிப்பது உறுதியாகி இருப்பதாக தகவல் பரவி உள்ளது.


Next Story