காதலர் விஜய் வர்மாவை செல்லமாக 'பேபி' என அழைத்த தமன்னா


காதலர் விஜய் வர்மாவை செல்லமாக பேபி என அழைத்த தமன்னா
x
தினத்தந்தி 15 April 2024 3:20 PM GMT (Updated: 15 April 2024 3:55 PM GMT)

கடந்த சனிக்கிழமை இரவு கச்சேரியிலிருந்து இருவரும் வெளியேறியபோது, தமன்னா விஜய்யை "பேபி" என்று அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் வர்மா மற்றும் தமன்னா பாலிவுட் ரசிகர்களின் மிகவும் விரும்பமான ஜோடி. இந்த ஜோடி செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறார்கள்.

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் கவாலாயா பாடலில் நடனம் ஆடியதன் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார். இதற்கு முன்னதாக, நடிகை தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் நடித்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது.

நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்த நிலையில், இருவரும் காதலிப்பதாக ஊடகங்களில் கிசுகிசுக்கள் வெளியான நிலையில், கடந்த ஆண்டு தமன்னாவும் விஜய் வர்மாவும் காதலிப்பதாக பொதுவில் அறிவித்தனர். ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தனர்.

நடிகை தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் தங்கள் காதலை அறிவித்ததில் இருந்து, இந்த ஜோடி பாலிவுட்டி விருப்பமான ஜோடியாக உள்ளனர். இவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம், ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் இருவரும் ஒருவருக்கொருவர் செல்லமாக, ஸ்வீட்டாக அழைத்துக்கொள்கிறார்கள். லவ் டேட்டிங் செய்து மகிழ்கிறார்கள்.

இந்நிலையில், தமன்னாவும் விஜய்யும் எங்கே சென்றாலும் இணைபிரியாமல் சென்று வருகிறார்கள். அப்படி, கடந்த சனிக்கிழமை இரவு கச்சேரியிலிருந்து இருவரும் வெளியேறியபோது, தமன்னா விஜய்யை "பேபி" என்று அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தமன்னா சிவப்பு நிற உடையில் குஞ்சம் மற்றும் நீல நிற சட்டை ஜாக்கெட்டுடன் அழகாக இருந்தார். இருவரும் கச்சேரியிலிருந்து தமன்னா - விஜய் வர்மா ஜோடி வெளியே சென்றபோது, அவர்களை புகைப்படம் எடுக்க முயற்சி செய்தனர். அப்போது, தமன்னா விஜய் வர்மாவை 'பேபி' என்று அழைத்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் செய்தது இடம்பெற்றுள்ளது.


Next Story