படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட டைரக்டர் பேரரசு வற்புறுத்தல்


படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட டைரக்டர் பேரரசு வற்புறுத்தல்
x

தமிழ் படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று டைரக்டர் பேரரசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

'ஸ்ட்ரைக்கர்' என்ற பெயரில் புதிய படம் சைக்காலஜி திகில் கதையம்சத்தில் தயாராகி உள்ளது. இதில் ஜஸ்டின் விஜய் நாயகனாகவும் வித்யா பிரதீப் நாயகியகவும் நடித்துள்ளனர். ராபர்ட், கஸ்தூரி, அபிநயஸ்ரீ ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். எஸ்.ஏ.பிரபு இயக்கி உள்ளார்.

'ஸ்ட்ரைக்கர்' பட விழா நிகழ்ச்சியில் பிரபல டைரக்டர் பேரரசு பங்கேற்று பேசும்போது, "கருணாநிதி காலத்தில் படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு உண்டு என்கிற சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது வெளியான அனைத்து படங்களுமே தமிழில் டைட்டில் வைத்து வெளியாகின.

அஜித்தின் காட்பாதர் படம் கூட வரலாறு என்று பெயர் மாற்றி வெளியானது. ஆனால் இப்போது பல படங்களுக்கு ஆங்கிலத்தில்தான் டைட்டில் வைக்கிறார்கள். எனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்ப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் என்கிற சட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும்.

இன்று பலரும் இளைஞர்களுக்கு பிடிக்கும் படம் என்று சொல்லி படம் எடுக்க வருகிறார்கள். அந்த படங்கள் எல்லாம் ஒரு உயரத்திற்கு மேலே போகாது. குடும்பத்தினர், குழந்தைகள் அனைவருக்கும் பிடித்தமான ஒரு படத்தை எடுக்க முயற்சிக்க வேண்டும்'' என்றார்.

1 More update

Next Story