'தமிழர் ஒற்றுமை வென்றது' - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஜி.வி.பிரகாஷ் வரவேற்பு


தமிழர் ஒற்றுமை வென்றது - சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு ஜி.வி.பிரகாஷ் வரவேற்பு
x

ஜல்லிக்கட்டு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

சென்னை,

ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி பல்வேறு தரப்பில் இருந்து தொடுக்கப்பட்ட வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை நேற்று அறிவித்தனர்.

அதில், "தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை. ஜல்லிகட்டு போட்டிகள் தொடர்பாக தமிழ்நாடு அரசு அளித்த ஆவணங்கள் எங்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் உள்ளன. தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை. சட்ட விதிகளுக்கு உட்பட்டே உருவாக்கப்பட்டுள்ளது. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும்" என்று தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "6 ஆண்டுகளுக்கு முன் நம்மவர்களின் அகிம்சை வழி வீர தீர சூரத்தை சாட்சியாய் கண்டேன், போராட்டத்தில் நானும் ஒரு துளியாய் நின்றேன். அரசின் ஆணையை உறுதி செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் மெய்சிலிர்த்து போனேன். தமிழர் ஒற்றுமை வென்றது" என்று பதிவிட்டுள்ளார்.Next Story