நேற்று 'நா ரெடி' அப்டேட்... இன்று மக்கள் இயக்க நிகழ்வில் நாளைய வாக்காளர்களே...! - நடிகர் விஜய் பேச்சு


நேற்று நா ரெடி அப்டேட்... இன்று மக்கள் இயக்க நிகழ்வில் நாளைய வாக்காளர்களே...! - நடிகர் விஜய் பேச்சு
x
தினத்தந்தி 17 Jun 2023 11:59 AM IST (Updated: 17 Jun 2023 5:59 PM IST)
t-max-icont-min-icon

மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சியில் அசுரன் பட வசனத்தை கூறி மாணவர்களை நடிகர் விஜய் உற்சாகப்படுத்தினார்.

சென்னை

அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிவு வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது,

விழாவில் நடிகர் விஜய் பேசியதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் இந்த பொதுத்தேர்வில் சாதனை படைத்த என் நண்பா, நண்பிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் மக்கள் இயக்க நண்பர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் என் வணக்கம். நான் நிறைய இதுபோன்ற ஆடியோ நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகளில் எல்லாம் பேசியுள்ளேன். ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சியில் பேசியது இது தான் முதல் முறை. மனதிற்கு எதோ பெரிய பொறுப்புணர்ச்சி வந்ததைப்போல் உணர்கிறேன்.

நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்டராகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது.


அசுரன் பட வசனத்தை கூறி மாணவர்களை உற்சாகப்படுத்திய விஜய்...

இந்த விழா நடத்துவதற்கான காரணம் ஒரு திரைப்படத்தில் வரும் வசனம் உன்னிடம் இருந்து சொத்து, நிலத்தை எடுத்துக்கொள்ளலாம். கல்வியை உன்னிடம் இருந்து யாரும் எடுத்துக்கொள்ள முடியாது என்று சொன்னார்.

முடிந்தவரை படியுங்கள் எல்லோரையும் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் எல்லா தலைவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அம்பேத்கர், பெரியார், காமராஜரை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். நல்ல விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள் மற்றதை விட்டுவிடுங்கள்.

நான் நடிகன் ஆகவில்லை என்றால் டாக்டராகியிருப்பேன் என்று கூற விரும்பவில்லை. என் கனவு எல்லாம் சினிமா, நடிப்பு தான் அதை நோக்கியே என் பயணம் போய் கொண்டிருந்தது.

நாளைய வாக்காளர்கள் நீங்கள் அடுத்தடுத்து நீங்கள் புதிய வருங்கால தலைவர்களை தேர்தெடுப்பவர்கள் நீங்கள் தான்.

நம் விரலை வைத்து நம் கண்ணை குத்துவது பற்றி கேள்விபட்டுள்ளீர்களா? அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. அது தான் நாமும் இப்போது செய்துகொண்டிருக்கிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பது. உதாரணமாக ஒரு வாக்கிற்கு 1000 ரூபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள் ஒரு தொகுதியில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு கொடுக்கிறார்கள் என்றால் 15 கோடி ரூபாய் ஆகிறது. ஒருவர் 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்றால் அவர் அதற்கு முன் எவ்வளவு சம்பாதித்து இருக்க வேண்டும். யோசித்து பாருங்கள். இதெல்லாம் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

நீங்கள் தான் அடுத்தடுத்த ஆண்டுகளில் முதல் முறை வாக்காளர்களாக வர உள்ளீர்கள். இது நடக்கும் போது தான் உங்கள் கல்வி முறை முழுமை அடைந்ததாக எடுத்துக் கொள்ளலாம் என கூறினார்.


தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'லியோ' படத்தின் அப்டேட் குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது. அதில் 'Naa Ready' என சிங்கிள் பாடல் குறித்து சொல்லப்பட்டது.

இந்நிலையில், இன்று மக்கள் இயக்க நிகழ்வில் நடிகர் விஜய் பங்கேற்றுள்ளார். இது இரண்டையும் வைத்து பார்க்கும் போது குறிப்பால் தனது அரசியல் வருகையை விஜய் வெளிப்படுத்துகிறார் என்ற கருத்தை எழச் செய்கிறது.

அதற்கு அறிகுறியாக நடிகர் விஜய் 3 விஷயங்களை செய்துள்ளார். ஒன்று அம்பேத்கர் பிறந்தநாள் அன்று 234 தொகுதிகளிலும் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உத்தரவிட்டார். அது போல் உலக பட்டினி தினத்தன்று 234 தொகுதிகளிலும் மதிய உணவு வழங்குமாறு தெரிவித்திருந்தார். அது போல் 10, பிளஸ் 2 தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளை சந்தித்து அவர்களுக்கு நிதியுதவியும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கி பேசி உள்ளார்.


Next Story