விரைவில் தொடங்கும் தனி ஒருவன் 2-ம் பாகம்...!


விரைவில் தொடங்கும் தனி ஒருவன் 2-ம் பாகம்...!
x

தனி ஒருவன் 2-ம் பாகம் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் தயாராகி உள்ளனர்

மோகன்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி நடித்த தனி ஒருவன் படம் 2015-ல் வெளியாகி வெற்றி பெற்றது. இதில் நாயகியாக நயன்தாரா வில்லனாக அரவிந்தசாமி நடித்து இருந்தனர்.

தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று சில வருடங்களுக்கு முன்பு மோகன்ராஜா தெரிவித்து இருந்தார். அவர் கூறும்போது, "என் வாழ்க்கையில் பெரிய ஆசிர்வாதமாக தனி ஒருவன் படம் அமைந்தது. அடுத்து தனி ஒருவன் 2-ம் பாகம் படத்தை எடுக்க இருக்கிறேன். இது முதல் பாகத்தை விடவும் சிறந்த படமாக இருக்கும்'' என்றார்.

தனி ஒருவன் 2-ம் பாகத்திலும் நானே கதாநாயகனாக நடிக்க இருக்கிறேன் என்று ஜெயம்ரவி கூறினார். ஆனாலும் பட வேலைகள் தொடங்காமல் இருந்தது. மோகன்ராஜா, ஜெயம்ரவி இருவருமே வேறு படங்களில் பிசியாக இருந்ததால் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தற்போது தனி ஒருவன் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் தயாராகி உள்ளனர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த சில தினங்களில் வெளியாக இருக்கிறது.


Next Story