உருவக்கேலியால் நடிகை வருத்தம்


உருவக்கேலியால் நடிகை வருத்தம்
x

பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர் விமர்சனங்களையும், உருவக்கேலிகளையும் எதிர்கொண்டேன் என வருத்தம் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகை பூமி பட்னேகர். இவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். இந்த வருடம் பூமி பட்னேகர் நடிப்பில் 3 படங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் தனக்கு எதிராக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து பூமி பட்னேகர் அளித்துள்ள பேட்டியில், "நடிகர்-நடிகைகளை வலைத்தளத்தில் விமர்சிப்பது, கேலி செய்வது சகஜமாகி விட்டது. பண்டிகை நாட்களில் பாரம்பரிய உடை அணிந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்தால் விமர்சிக்கிறார்கள். சினிமா பட விழாக்களில் வந்ததுபோல் ஏன் உடை அணியவில்லை" என்றார்கள்.

இதற்கு முன்பெல்லாம் நாம் அணியும் உடைகள் குறித்து குடும்பத்தினர் மட்டுமே பேசுவார்கள். இப்போது உடை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள். எனது ஆடை மீது விமர்சனங்களையும், உருவக்கேலிகளையும் எதிர்கொண்டேன். குட்டையான உடைகளை ஏன் அணிகிறாய் என்று நிறைய பேர் கேட்கிறார்கள். ஆபாச வார்த்தைகளையும் உபயோகிக்கிறார்கள்.

நமது கலாசாரத்தை காக்க வேண்டும் என்பார்கள். பெண்களை கவுரவப்படுத்தும் கலாசாரம் நமது பாரம்பரியத்தில் உள்ளது. ஆனால் இப்போது இணையதளத்தில் பேசும் விதம் ஆபாசமாக இருக்கிறது. அவற்றை படிக்க நிறைய தைரியம் தேவைப்படுகிறது'' என்றார்.


Next Story