'மாமன்னன்' படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!


மாமன்னன் படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!
x

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'மாமன்னன்' திரைப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் 'மாமன்னன்' படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடல் வருகிற 27-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story