'வணங்கான்' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்


வணங்கான் படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்
x

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார்.

சென்னை,

சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலா, தற்போது 'வணங்கான்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் 'வணங்கான்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இந்த பூஜையில் இயக்குனர்கள் பாலா, மிஷ்கின், விஜய், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர் சண்முகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.



Next Story