புற்றுநோய் பாதிப்பு... பிரபல நடிகர் கவலைக்கிடம்


புற்றுநோய் பாதிப்பு... பிரபல நடிகர் கவலைக்கிடம்
x

பிரபல மலையாள நடிகர் இன்னொசென்ட். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். காமெடி, குணசித்திர கதாபாத்திரங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிப்புக்காக கேரள அரசு விருதுகளை பெற்றுள்ளார். மலையாள நடிகர் சங்க தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

இன்னொசென்ட்டுக்கு 2012-ல் தொண்டை புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தார்.

இந்த நிலையில் தற்போது அவருக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அவர் விரைவில் நலம் பெற ரசிகர்களும் திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.


Next Story