நிதின் சத்யா தயாரிக்கும் படம்


நிதின் சத்யா தயாரிக்கும் படம்
x

'காதல் கண்டிஷன்ஸ் அப்ளை' என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் மஹத் ராகவேந்திரா, சனா மக்புல், வெங்கட் பிரபு, விவேக் பிரசன்னா, அபிஷேக் ராஜா, மனோபாலா, திவ்யதர்ஷினி, மஹேஸ்வரி சாணக்கியன், அர்ச்சனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ரவீந்தர், சந்திரசேகர் வழங்க, நிதின்சத்யா தயாரிக்கிறார்.

இந்தப் படத்தை ஆர்.அரவிந்த் டைரக்டு செய்கிறார். இசை: ரமேஷ் தமிழ் மணி. நடிகர் மகத் பேசும்போது, ``இது எனது 16-வது படம், ஆனால் ஹீரோவாக முதல் படம். எனது நண்பர் நிதின் சத்யா, கோவிட் காலத்தில் என்னை அணுகி படம் பண்ணலாம் என்று கூறினார். இயக்குநர் அரவிந்த் உடன் பல ஆண்டுகளாக பயணித்து இருக்கிறேன். அவருடன் படம் செய்தது மகிழ்ச்சி'' என்றார்.

தயாரிப்பாளர் நிதின் சத்யா கூறும்போது, ``இது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த ஜாலியான ஒரு திரைப்படம். படத்தில் நடித்த அனைவரும் இந்தப் படத்திற்காக தங்களது முழு ஆதரவையும் கொடுத்தனர். பலருடைய உத்வேகத்தாலும், உதவியாலும் இந்தப் படம் நன்றாக உருவாகி இருக்கிறது. நல்ல நட்புடன் சேர்ந்து நல்ல படைப்பை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் இந்தப் படம்'' என்றார்.


Next Story