தன்ஷிகா நடிக்கும் 'தி புரூப்' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது


தன்ஷிகா நடிக்கும் தி புரூப் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது
x

'ஆக்சன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார்.

சென்னை,

மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா. இவர் தற்போது கோல்டன் ஸ்டூடியோஸ்-23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

'ஆக்சன்' படமாக உருவாகும் இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்குகிறார். ரித்விகா, அசோக் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது. 'தி புரூப்' படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. வருகிற ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் ஒருவரை அடித்து வீழ்த்தி அவரின் நெஞ்சில் ஏறி தன்ஷிகா ஆவேசமாக கால் வைத்து நிற்பது போன்று இடம் பெற்று உள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





Next Story