'தி கோட்' : இசை வெளியீட்டு விழா எப்போது? - வெங்கட் பிரபு கொடுத்த அப்டேட்


The Goat : When is the audio launch?
x

'தி கோட்' படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது.

சென்னை,

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அடுத்த மாதம் 5-ம் தேதி வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து, இப்படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியிடப்பட்டது. மொத்தம் 2 நிமிடம் 45 வினாடிகள் ஓடும் இந்த டிரெய்லர் வெளியாகி குறைவான நேரத்தில் 1.5 கோடி பார்வையாளர்களை கடந்தது

தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த சூழலில், சென்னையில் 'தி கோட்' படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில் 'தி கோட்' படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர் பேசுகையில்,

'ஒரு விஜய் ரசிகனா நானும் அதுக்காகதான் காத்திருக்கிறேன். அதை விஜய் சார்தான் சொல்லவேண்டும். அவர் முடிவுதான். எதுவாக இருந்தாலும் இன்னும் சில நாட்களில் அறிவிப்பு வெளியாகும். இருக்கு, இல்லை என்பதை அதிகாரபூர்வமாக அறிவிப்போம்,' என்றார்.

1 More update

Next Story