கதாநாயகியான பரதநாட்டிய கலைஞர்


கதாநாயகியான பரதநாட்டிய கலைஞர்
x

தமிழில் திரைக்கு வந்த `யாத்திசை' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள ராஜலட்சுமி கோபாலகிருஷ்ணன் பரத நாட்டிய கலைஞர். படத்திலும் அதே கதாபாத்திரத்திலேயே நடித்து இருந்தார். இவர் தனது பள்ளி பருவத்தில் இருந்தே பரத நாட்டிய கலையை முறையாக கற்றுள்ளார். தற்போது பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி களுக்கு பரத நாட்டியம் கற்றுக் கொடுத்து வருகிறார்.

ராஜலட்சுமி கோபால கிருஷ்ணனுக்கு மேலும் சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. தனக்கு பொருத்தமான கதாபாத்திரம் மட்டுமன்றி வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார். முதல் படமான `யாத்திசை' சினிமாவில் மிகப்பெரிய பயிற்சியையும் அனுபவத்தையும் கற்றுத் தந்துள்ளது என்கிறார்.

1 More update

Next Story