'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட் - இன்று மாலை வெளியீடு


இந்தியன் 2 படத்தின் முக்கிய அப்டேட் - இன்று மாலை வெளியீடு
x

image courtecy:twitter@shankarshanmugh

தினத்தந்தி 6 April 2024 8:20 AM GMT (Updated: 6 April 2024 8:22 AM GMT)

'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை வெளியாகிறது.

சென்னை,

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படம் வெளியாகி 28 வருடங்களுக்கு பின், இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகரித்தது.

இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக, இந்தியன் 3 அதாவது மூன்றாவது பாகத்தையும் இயக்குனர் சங்கர் இயக்கி வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. எனவே இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.

இரண்டாம் பாகத்தின் பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 'இந்தியன் 2' படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


Next Story