'அயலான்' படத்தின் 'அயலா அயலா' பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!


அயலான் படத்தின் அயலா அயலா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!
x

இந்த படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது.

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியிருக்கும் இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் 'அயலான்' தான் என படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்த படத்தின் முதல் பாடல் 'வேற லெவல் சகோ' கடந்த 2021-ம் ஆண்டு வெளியானது. கிராபிக்ஸ் பணிகள் காரணமாக படத்தின் வெளியீட்டு தேதி தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்த நிலையில், வருகிற பொங்கலை முன்னிட்டு 'அயலான்' படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்தது.

இந்நிலையில், அயலான் படத்தில் இடம்பெற்றுள்ள 'அயலா அயலா' என்ற பாடல், இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த பாடல் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story