''படத்துக்கு கதைதான் ஹீரோ" -நடிகர் சத்யராஜ்


படத்துக்கு கதைதான் ஹீரோ -நடிகர் சத்யராஜ்
x

‘‘படத்துக்கு கதைதான் ஹீரோ” என்று படவிழா நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேசினார்.

சத்யராஜ், அஜ்மல், ஜெய்வந்த், துஷ்யந்த் ஆகியோர் இணைந்து 'தீர்க்கதரிசி' என்ற படத்தில் நடித்துள்ளனர். பி.ஜி.மோகன், எல்.ஆர். சுந்தரபாண்டியன் இயக்கி உள்ளனர். சதீஷ்குமார் தயாரித்துள்ளார். இந்த படவிழா நிகழ்ச்சியில் சத்யராஜ் பங்கேற்று பேசும்போது, '' தயாரிப்பாளர்களுக்கு சினிமா பற்றி தெரிந்து இருப்பது அவசியம். ஜோசியம் பார்த்து படம் எடுக்க வரக்கூடாது.

சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் வெற்றியாளர்கள் சேர்ந்து எடுக்கிற படங்கள் உள்ளன. சிறுபட்ஜெட் படங்களும் உள்ளன. நல்ல மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்களை வைத்து பெரிய படங்கள் எடுப்பது எளிது.ஆனால் சிறிய பட்ஜெட் படங்கள் எடுப்பது கஷ்டம்.

ஒரு படத்தில் ஹீரோவின் தகுதிக்கு ஏற்ப காட்சிகளை வைக்க வேண்டும். ரஜினி நடிக்க வேண்டிய காட்சிகளை இன்னொரு நடிகருக்கு கொடுக்க முடியாது. வளர்ந்து வரும் கதாநாயகனை திருப்திப்படுத்த மாஸ் காட்சிகள் வைத்தால் நன்றாக இருக்காது. படத்தின் ஹீரோ, நகைச்சுவை, வில்லன் எல்லாமே கதைதான்.

அதை மனதில் வைத்து படம் எடுக்கும் இயக்குனரால்தான் ஜெயிக்க முடியும். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வெற்றி பெறும். இந்த படத்தின் கதையும் சிறப்பாக இருப்பதால் வரவேற்பை பெறும். அஜ்மல் மிகசிறந்த நடிகர் என்பதை தெரிந்து கொண்டேன்''என்றார்.

1 More update

Next Story